Thursday, 26 May 2011

சமசீர் கல்வி நிலை!!!!



சமசீர் கல்வி முறை திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது?

இக்கேள்வி ஆய்வு நடத்தும் போதோ, அல்லது கலைஞர் அவர்கள் இத்திட்டத்தை கொண்டு வந்த போதை விட இப்பொழுது பரவலாக அனைவரும் அறிந்து கொள்ளும் நிலைக்கு நம் முதல்வர் அவர்கள்  இக்கல்வி திட்டத்தை சர்வதேச அளவில் விளம்பரபடுத்திய தன்மையை நாம் வெகுவாக பாராட்டுகிறோம்...

அதே சமயத்தில் சமசீர் என்றால் என்ன? ஏன் உருவாக்கப்பட்டது? உருவாக்குதலில்? யாரெல்லாம் ஈடுப்பட்டார்கள் ? அவர்களின் ஆய்வுகள்  என்ன? அரசியல் + சட்ட வடிவம் என்ன? இக்கல்வியால்   நாளைய சமுதாயம் எப்படி விழிப்படைய முடியும் ?

கலைஞர், கலைஞரின் மகள் கனிமொழி இத்தியாதி இவர்களின் கவிதைகள் கட்டுரைகள் கட்சிப்படங்கள் எதற்கு முன்னுருமை கொடுக்க வேண்டும் ?அல்லது கொடுக்கலாமா ? எதை நாம் தவிர்க்கணும் ? இது போன்ற நிறைய சந்தேகங்களும் , கேள்விகளும் பிறக்கின்றன!

இது போன்ற இன்னும் அதிகமான கேள்விகள் நமக்குள் இருந்தாலும்?

நாம் என்ன செய்ய போகிறோம்?

அரசு நடவடிக்கைகள் அராஜகமாக இருந்தாலும் ,டாஸ்மாக் போன்று கூத்தடிக்கிற விசயமாக இருந்தாலும் நாம்  அமைதியா போவது சரியா தவறா என்று நாம்   இவ்வளவு நாள் சிந்தித்தோமா?!!!!!...

இனிமேலாவது சிந்திபோம என்ற கருத்தில் என் பதிவுகளை இங்கே தருகிறேன்...

என் பதிவின் நோக்கம்...

அப்போதைய முதல்வரின் திட்டத்தையோ அல்லது இப்போதைய முதல்வரின் திட்டத்தையோ குறை பேசுவதை விட ...
இத்த்திட்டதில் என்ன விதமான குறைகள் இருக்கு? குறைகளை எப்படி களையலாம்?

அரசியல் ரீதியாக சட்ட ரீதியாக மக்களின் மன நிலை ரீதியாக உங்களுடைய பதிவுகள் இருப்பது மிக மிக அவசியம்....

தனிமனித தாக்குதல்  பகுதிகளை தவிர்க்க வேண்டும் என்பது எமது  நோக்கம்...

ஆகையால் தலைப்புகளை ஆய்வு செய்து அதற்க்கான பதிவுகளை பதிவிடுமாறு மிக தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்...

கீழ்கண்ட தொடர்புகளை பயன்படுத்தி , எனக்குத்தெரிந்ததை விட உங்களுக்குத் தெரிந்திருப்பின் அச்சிந்தனைகளையும் இங்கே பதிவிடுமாறும்  கேட்டுக்கொள்கிறேன்...

http://marudhang.blogspot.com/2011/05/blog-post_23.html

http://saigokulakrishna.blogspot.com/2011/05/2011-003.html

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/india/4737-2011-05-23-22-34-30?sms_ss=facebook&at_xt=4ddba5d6d238475b%2C0

சிந்தனையாளர்கள்  வாழ்க வளர்க....

வாழ்த்துகள் + நன்றிகளுடன்....
லீலா கண்ணம்மா....