Thursday, 26 May 2011

சமசீர் கல்வி நிலை!!!!



சமசீர் கல்வி முறை திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது?

இக்கேள்வி ஆய்வு நடத்தும் போதோ, அல்லது கலைஞர் அவர்கள் இத்திட்டத்தை கொண்டு வந்த போதை விட இப்பொழுது பரவலாக அனைவரும் அறிந்து கொள்ளும் நிலைக்கு நம் முதல்வர் அவர்கள்  இக்கல்வி திட்டத்தை சர்வதேச அளவில் விளம்பரபடுத்திய தன்மையை நாம் வெகுவாக பாராட்டுகிறோம்...

அதே சமயத்தில் சமசீர் என்றால் என்ன? ஏன் உருவாக்கப்பட்டது? உருவாக்குதலில்? யாரெல்லாம் ஈடுப்பட்டார்கள் ? அவர்களின் ஆய்வுகள்  என்ன? அரசியல் + சட்ட வடிவம் என்ன? இக்கல்வியால்   நாளைய சமுதாயம் எப்படி விழிப்படைய முடியும் ?

கலைஞர், கலைஞரின் மகள் கனிமொழி இத்தியாதி இவர்களின் கவிதைகள் கட்டுரைகள் கட்சிப்படங்கள் எதற்கு முன்னுருமை கொடுக்க வேண்டும் ?அல்லது கொடுக்கலாமா ? எதை நாம் தவிர்க்கணும் ? இது போன்ற நிறைய சந்தேகங்களும் , கேள்விகளும் பிறக்கின்றன!

இது போன்ற இன்னும் அதிகமான கேள்விகள் நமக்குள் இருந்தாலும்?

நாம் என்ன செய்ய போகிறோம்?

அரசு நடவடிக்கைகள் அராஜகமாக இருந்தாலும் ,டாஸ்மாக் போன்று கூத்தடிக்கிற விசயமாக இருந்தாலும் நாம்  அமைதியா போவது சரியா தவறா என்று நாம்   இவ்வளவு நாள் சிந்தித்தோமா?!!!!!...

இனிமேலாவது சிந்திபோம என்ற கருத்தில் என் பதிவுகளை இங்கே தருகிறேன்...

என் பதிவின் நோக்கம்...

அப்போதைய முதல்வரின் திட்டத்தையோ அல்லது இப்போதைய முதல்வரின் திட்டத்தையோ குறை பேசுவதை விட ...
இத்த்திட்டதில் என்ன விதமான குறைகள் இருக்கு? குறைகளை எப்படி களையலாம்?

அரசியல் ரீதியாக சட்ட ரீதியாக மக்களின் மன நிலை ரீதியாக உங்களுடைய பதிவுகள் இருப்பது மிக மிக அவசியம்....

தனிமனித தாக்குதல்  பகுதிகளை தவிர்க்க வேண்டும் என்பது எமது  நோக்கம்...

ஆகையால் தலைப்புகளை ஆய்வு செய்து அதற்க்கான பதிவுகளை பதிவிடுமாறு மிக தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்...

கீழ்கண்ட தொடர்புகளை பயன்படுத்தி , எனக்குத்தெரிந்ததை விட உங்களுக்குத் தெரிந்திருப்பின் அச்சிந்தனைகளையும் இங்கே பதிவிடுமாறும்  கேட்டுக்கொள்கிறேன்...

http://marudhang.blogspot.com/2011/05/blog-post_23.html

http://saigokulakrishna.blogspot.com/2011/05/2011-003.html

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/india/4737-2011-05-23-22-34-30?sms_ss=facebook&at_xt=4ddba5d6d238475b%2C0

சிந்தனையாளர்கள்  வாழ்க வளர்க....

வாழ்த்துகள் + நன்றிகளுடன்....
லீலா கண்ணம்மா....


6 comments:

  1. மிகவும் அழகான சிந்தனை .. உங்கள் அன்புடன் .. அறிவு பணி தொடர வாழ்த்துக்கள் !!

    தேடல் தொடரட்டும் ....

    நன்றி
    R..J..

    ReplyDelete
  2. பெற்றோர்கள் தங்களது குழந்தைக்களுக்கு
    என்ன கல்வி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் .
    இதற்க்கு தற்போது படிக்கும் படித்த பட்டதாரி மாணவர்களின்
    அறிவுரையை கேட்டாலே போதும் .

    எதோ குடுத்தோம் , எதோ படித்தார்கள் என்பது எப்படி தெரிமா இருக்கு
    சிற்றின்பதிர்க்காண்டி பெண்ணை தேடி போகும்
    ஆணை போலவும் , பெண்ணை போலவும் இருக்கு .

    கல்வி உயர்ந்தது .
    அதற்காக பெற்றோர்கள் சிரத்தை எடுக்க வேண்டும் .
    ஒற்றுமையா செயல்படவேண்டும் .
    இந்த அரசு , அந்த அரசு , நொந்த அரசு பேச்சுக்கே இடமில்ல .

    வாழ்கைய எவ்வளவோ நேரத்தை வீனடிகிரர்கள் .
    குழந்தைகளுக்காக ஒரு ஒருவாரம் ,
    பெற்ற்ரோர்களும் , மாணவர்களும் , கலந்து
    தீர்மானிக்கலாம் அல்லவா .

    கருத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் .

    ReplyDelete
  3. //Vijayanth said... //கருத்து பிழை இருந்தது .. மன்ணிசாச்சு

    ReplyDelete
  4. thanks a lot...i would like to know about this sama seer kalvi....

    ReplyDelete
  5. ஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.
    சபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

    நீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் பட்டிமன்றம் நடத்தி நீதிமன்றம் வரை சென்று வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான் பேசவேண்டிருக்கிறது.

    நான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம். ‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல காலங்களுக்கு முன் நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள் தள்ளிவிட்டது.
    ‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் காணலாம்.
    1. http://www.kelvi.tk
    2. http://arivuu.files.wordpress.com/2011/08/sivavidya.pdf
    மேலுள்ளவைகளைப் படித்து விட்டு வாரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார், முதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும். கல்வித்துறையில் பணிபுரியும் முட்டாள்களே மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். கருத்துக்களைத் திரிக்காதீர்கள். திரித்தால், என்போன்றவர்களிடம் கேவலப்பபட்டுப் போவீர்கள். செய்யுமுன் சிந்தித்து செயல்படுங்கள். கால் செருப்பு தூக்கப்போனால் பிறகு செருப்படி வாங்கவேண்டியதுதான்.
    ———————————————————

    அறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. உங்க‌ள் குழந்தைக‌ளை எங்க‌ள் ப‌ள்ளிக்கு, க‌ல்லூரிக்கு அனுப்புங்க‌ள். நாங்க‌ள் அவ‌ர்க‌ளின் அறிவை வ‌ள‌ர்த்து விடுகிறோம். இது திருட்டுக் க‌ய‌வாளி ஆசிரிய‌ கொள்ளைக்கூட்ட‌ங்க‌ளின் பொய்யுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று, புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா? தேவையில்லை. உன்னிட‌ம் சிந்திக்கும் திற‌னிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.

    கேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

    ப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.
    ஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    .
    .
    .
    விதிப்ப‌டி பொருளா? பொருட்ப‌டி விதியா? எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள் உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில் என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து. விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள் உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில் என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை.

    பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.

    ReplyDelete